Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:234 — பசுங்கன்று

எவரேனும் தங்கள் மனைவியரை விட்டு விட்டு மரணித்துவிட்டால், அவர்களுடைய விதவைகள் (மறுமணம் செய்வதற்கு முன்) நான்கு மாதமும் பத்து நாட்களும் காத்திருக்க வேண்டும். அவர்கள் அவர்களுடைய தவணைக் காலத்தை நிறைவு செய்தவுடன் அவர்கள் செய்ய விரும்பும் எந்த நன்னெறியான செயல்களையும், அவர்களை செய்ய விடுவதால் நீங்கள் தவறு செய்தவர்களாக மாட்டீர்கள். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[2:233] விவாகரத்து செய்யப்பட்ட தாய்மார்கள் குழந்தை களுக்கு அவர்களின் தந்தை விரும்பினால் இரண்டு முழு வருடங்கள் பாலூட்ட வேண்டும். தந்தை அந்த தாய்க்கு உணவும், உடையும் நியாயமான முறையில் வழங்க வேண்டும். எவர் மீதும் அவர் சக்திக்கு மீறிய சுமையை சுமத்தக் கூடாது. குழந்தையின் காரணமாக தாய் துன்புறுத்தப்படக்கூடாது, அவ்வாறே குழந்தையின் காரணமாக தந்தை துன்புறுத்தப்படக்கூடாது. (தந்தை இறந்து விட்டால்) அவருடைய வாரிசுதாரர் இந்தப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். நன்கு கலந்தாலோசித்த பின்னர் குழந்தையின் பெற்றோர் ஒருவருக்கொருவர் பிரிந்து விட ஒப்புக் கொண்டு அவ்வாறு செய்வதால் அவர்கள் தவறு செய்தவர்களாக மாட்டார்கள். நீங்கள் நியாயமானதை கொடுத்து பாலூட்டும் செவிலித் தாயாரை வாடகைக்கு அமர்த்திக் கொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ளுங்கள் மேலும் கடவுள் நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் பார்ப்பவராக இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

[2:235] பெண்களுடனான உங்கள் திருமண நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதாலோ அல்லது இரகசியமாக வைப்பதாலோ உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப் பற்றி நினைப்பீர்கள் என்பதை கடவுள் அறிவார். கலந்தாலோசனை செய்வதற்கு நன்னெறியான விஷயம் எதுவும் இருந்தாலன்றி அவர்களை நீங்கள் இரகசியமாக சந்திக்கக் கூடாது. அவர்களுடைய தவணைக்காலம் நிறை வடையும் வரை திருமணத்தை நிறைவேற்றக் கூடாது. உங்களின் ஆழ்மனதின் எண்ணங்கள் கடவுள்-க்கு தெரியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அவரைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கடவுள் மன்னிப்பவர், கருணையுடையவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.