குர்ஆன் 2:235 — பசுங்கன்று
பெண்களுடனான உங்கள் திருமண நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதாலோ அல்லது இரகசியமாக வைப்பதாலோ உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப் பற்றி நினைப்பீர்கள் என்பதை கடவுள் அறிவார். கலந்தாலோசனை செய்வதற்கு நன்னெறியான விஷயம் எதுவும் இருந்தாலன்றி அவர்களை நீங்கள் இரகசியமாக சந்திக்கக் கூடாது. அவர்களுடைய தவணைக்காலம் நிறை வடையும் வரை திருமணத்தை நிறைவேற்றக் கூடாது. உங்களின் ஆழ்மனதின் எண்ணங்கள் கடவுள்-க்கு தெரியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அவரைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கடவுள் மன்னிப்பவர், கருணையுடையவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
[2:234] எவரேனும் தங்கள் மனைவியரை விட்டு விட்டு மரணித்துவிட்டால், அவர்களுடைய விதவைகள் (மறுமணம் செய்வதற்கு முன்) நான்கு மாதமும் பத்து நாட்களும் காத்திருக்க வேண்டும். அவர்கள் அவர்களுடைய தவணைக் காலத்தை நிறைவு செய்தவுடன் அவர்கள் செய்ய விரும்பும் எந்த நன்னெறியான செயல்களையும், அவர்களை செய்ய விடுவதால் நீங்கள் தவறு செய்தவர்களாக மாட்டீர்கள். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[2:236] பெண்களைத் தீண்டுவதற்கு முன்னரோ அல்லது வரதட்சணைத் தொகையை கொடுப் பதற்கு முன்னரோ அவர்களை நீங்கள் விவா கரத்து செய்து விடுவதால் உங்கள் மீது குற்றம் இல்லை. இந்த விஷயத்தில் நீங்கள் அவர் களுக்கு இழப்பீடு செய்தாக வேண்டும். பணக் காரன் அவனால் இயன்றவரை, ஏழை அவனால் இயன்றவரை - ஒரு நியாயமான இழப்பீடு. நன்னெறியாளர்கள் மீது இது ஒரு கடமை யாகும்.