குர்ஆன் 2:236 — பசுங்கன்று
பெண்களைத் தீண்டுவதற்கு முன்னரோ அல்லது வரதட்சணைத் தொகையை கொடுப் பதற்கு முன்னரோ அவர்களை நீங்கள் விவா கரத்து செய்து விடுவதால் உங்கள் மீது குற்றம் இல்லை. இந்த விஷயத்தில் நீங்கள் அவர் களுக்கு இழப்பீடு செய்தாக வேண்டும். பணக் காரன் அவனால் இயன்றவரை, ஏழை அவனால் இயன்றவரை - ஒரு நியாயமான இழப்பீடு. நன்னெறியாளர்கள் மீது இது ஒரு கடமை யாகும்.
[2:235] பெண்களுடனான உங்கள் திருமண நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதாலோ அல்லது இரகசியமாக வைப்பதாலோ உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப் பற்றி நினைப்பீர்கள் என்பதை கடவுள் அறிவார். கலந்தாலோசனை செய்வதற்கு நன்னெறியான விஷயம் எதுவும் இருந்தாலன்றி அவர்களை நீங்கள் இரகசியமாக சந்திக்கக் கூடாது. அவர்களுடைய தவணைக்காலம் நிறை வடையும் வரை திருமணத்தை நிறைவேற்றக் கூடாது. உங்களின் ஆழ்மனதின் எண்ணங்கள் கடவுள்-க்கு தெரியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் அவரைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கடவுள் மன்னிப்பவர், கருணையுடையவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
[2:237] அப்பெண்களை தீண்டுவதற்கு முன் - ஆனால் வரதட்சனைத் தொகை நிச்சயித்த பின் நீங்கள் விவாகரத்து செய்வீர்களாயின் அவர்கள் தாமாக அவர்களின் உரிமையை விட்டுக் கொடுத்தாலோ அல்லது விவாகரத்திற்கு காரணமானவர்கள் வரதட்சணைத் தொகையை விட்டுக்கொடுக்க முடிவு செய்தாலோ அன்றி இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்ட வரதட்சணைத் தொகையில் பாதியாகும். விட்டுக் கொடுப்பதே நன்னெறி க்கு நெருக்கமானதாகும். நீங்கள் உங்களுக் கிடையிலே சுமூகமான உறவைப் பராமரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொன் றையும் கடவுள் பார்க்கின்றார்.