Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:237 — பசுங்கன்று

அப்பெண்களை தீண்டுவதற்கு முன் - ஆனால் வரதட்சனைத் தொகை நிச்சயித்த பின் நீங்கள் விவாகரத்து செய்வீர்களாயின் அவர்கள் தாமாக அவர்களின் உரிமையை விட்டுக் கொடுத்தாலோ அல்லது விவாகரத்திற்கு காரணமானவர்கள் வரதட்சணைத் தொகையை விட்டுக்கொடுக்க முடிவு செய்தாலோ அன்றி இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்ட வரதட்சணைத் தொகையில் பாதியாகும். விட்டுக் கொடுப்பதே நன்னெறி க்கு நெருக்கமானதாகும். நீங்கள் உங்களுக் கிடையிலே சுமூகமான உறவைப் பராமரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொன் றையும் கடவுள் பார்க்கின்றார்.

[2:236] பெண்களைத் தீண்டுவதற்கு முன்னரோ அல்லது வரதட்சணைத் தொகையை கொடுப் பதற்கு முன்னரோ அவர்களை நீங்கள் விவா கரத்து செய்து விடுவதால் உங்கள் மீது குற்றம் இல்லை. இந்த விஷயத்தில் நீங்கள் அவர் களுக்கு இழப்பீடு செய்தாக வேண்டும். பணக் காரன் அவனால் இயன்றவரை, ஏழை அவனால் இயன்றவரை - ஒரு நியாயமான இழப்பீடு. நன்னெறியாளர்கள் மீது இது ஒரு கடமை யாகும்.

[2:238] நீங்கள் தொடர்பு தொழுகைகளை விடாது கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமாக நடுத் தொழுகையை,மேலும் கடவுள்-க்கு முழுமை யாக உங்களை அர்ப்பணித்து விடுங்கள்.