குர்ஆன் 2:238 — பசுங்கன்று
حٰفِظوا عَلَى الصَّلَوٰتِ وَالصَّلوٰةِ الوُسطىٰ وَقوموا لِلَّهِ قٰنِتينَ
நீங்கள் தொடர்பு தொழுகைகளை விடாது கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமாக நடுத் தொழுகையை,மேலும் கடவுள்-க்கு முழுமை யாக உங்களை அர்ப்பணித்து விடுங்கள்.
[2:237] அப்பெண்களை தீண்டுவதற்கு முன் - ஆனால் வரதட்சனைத் தொகை நிச்சயித்த பின் நீங்கள் விவாகரத்து செய்வீர்களாயின் அவர்கள் தாமாக அவர்களின் உரிமையை விட்டுக் கொடுத்தாலோ அல்லது விவாகரத்திற்கு காரணமானவர்கள் வரதட்சணைத் தொகையை விட்டுக்கொடுக்க முடிவு செய்தாலோ அன்றி இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்ட வரதட்சணைத் தொகையில் பாதியாகும். விட்டுக் கொடுப்பதே நன்னெறி க்கு நெருக்கமானதாகும். நீங்கள் உங்களுக் கிடையிலே சுமூகமான உறவைப் பராமரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொன் றையும் கடவுள் பார்க்கின்றார்.
[2:239] அசாதாரணமான சந்தர்ப்பங்களில் நீங்கள் நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோ தொழுது கொள்ளலாம். நீங்கள் பாதுகாப்பை அடைந்தவுடன் நீங்கள் ஒரு போதும் அறிந்திராதவற்றை அவர் உங்களுக்கு கற்றுத்தந்துள்ளபடி கடவுள்-ஐ நீங்கள் நினைவு கூர வேண்டும்.