Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:248 — பசுங்கன்று

அவர்களுடைய வேதம் வழங்கப்பட்டவர் அவர்களிடம், “அவருடைய அரசுரிமைக்கு அடையாளமாக உடன்படிக்கை பேழை உங்களிடம் திரும்ப வந்து சேரும், உங்கள் இரட்சகரிடமிருந்து உறுதிப்பாட்டை கொண்டு வரும். மேலும் மோஸஸின் மக்களும், ஆரோனின் மக்களும் விட்டுச் சென்ற நினைவுச் சின்னங்கள் உங்களை வந்தடையும். அது வானவர்களால் சுமக்கப்படும். நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கையாளர்களாக இருந்தால், இது உங்களுக்கு திருப்திதரும் அடையாளமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

[2:247] “கடவுள் தாலூத்தை (சவுல்) உங்களுக்கு அரசராக நியமித்திருக்கின்றார்”, என்று அவர் களுடைய வேதம் வழங்கப்பட்டவர் அவர் களிடம் கூறினார். அவர்கள், “அவரை விட அரசுரிமைக்கு நாங்கள் அதிக தகுதியுடைய வர்களாக இருக்கும் போது எவ்வாறு அவர் எங்கள் மீது அரசுரிமை கொள்ள இயலும், அவர் செல்வந்தர் கூட இல்லையே?”, என்று கூறினார்கள். அவர், “உங்களுக்கு மேலாக கடவுள் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார். மேலும் அறிவாற்றலிலும் உடல் வலிமையிலும் அவருக்கு தாராளமாக அருளியிருக்கின்றார்”, என்று கூறினார். கடவுள் அவருடைய அரசுரி மையை தான் நாடுகின்றவருக்கு வழங்கு கின்றார். கடவுள் தாராளமானவர். எல்லாம் அறிந்தவர்.

[2:249] படைக்கு சவுல் தலைமை ஏற்ற போது அவர், “கடவுள் உங்களை ஒரு நீரோடையைக் கொண்டு சோதிப்பார். எவர் ஒருவர் அதிலிருந்து அருந்துகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல - அதை சுவைக் காதவர்கள் மட்டும் என்னைச் சார்ந்தவர் - ஒருமிடறு தவிர”, என்று கூறினார். அவர்களில் சிலரைத்தவிர மற்றவர்கள் அதிலிருந்து அருந்தினார்கள். நம்பிக்கை கொண்டவர்க ளோடு அதை அவர் கடந்தபோது அவர்கள், “இப்போது கோலியாத்தையும் அவனது படைகளையும் எதிர் கொள்ளக் கூடிய வலிமை எங்களுக்குக் குறைவாக உள்ளது” என்று கூறினார்கள். கடவுள்-ஐ சந்திப்போம் என்ற உணர்வோடிருந்தவர்கள், “கடவுள்-ன் அனு மதியுடன் பல சிறிய படையினர், பெரிய படையை தோற்கடித்திருக்கின்றனர். உறுதியாய் விடாமுயற்சியோடிருப்பவர்களோடு கடவுள் இருக்கின்றார்,” என்று கூறினார்கள்.