குர்ஆன் 2:247 — பசுங்கன்று
وَقالَ لَهُم نَبِيُّهُم إِنَّ اللَّهَ قَد بَعَثَ لَكُم طالوتَ مَلِكًا ۚ قالوا أَنّىٰ يَكونُ لَهُ المُلكُ عَلَينا وَنَحنُ أَحَقُّ بِالمُلكِ مِنهُ وَلَم يُؤتَ سَعَةً مِنَ المالِ ۚ قالَ إِنَّ اللَّهَ اصطَفىٰهُ عَلَيكُم وَزادَهُ بَسطَةً فِى العِلمِ وَالجِسمِ ۖ وَاللَّهُ يُؤتى مُلكَهُ مَن يَشاءُ ۚ وَاللَّهُ وٰسِعٌ عَليمٌ
“கடவுள் தாலூத்தை (சவுல்) உங்களுக்கு அரசராக நியமித்திருக்கின்றார்”, என்று அவர் களுடைய வேதம் வழங்கப்பட்டவர் அவர் களிடம் கூறினார். அவர்கள், “அவரை விட அரசுரிமைக்கு நாங்கள் அதிக தகுதியுடைய வர்களாக இருக்கும் போது எவ்வாறு அவர் எங்கள் மீது அரசுரிமை கொள்ள இயலும், அவர் செல்வந்தர் கூட இல்லையே?”, என்று கூறினார்கள். அவர், “உங்களுக்கு மேலாக கடவுள் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார். மேலும் அறிவாற்றலிலும் உடல் வலிமையிலும் அவருக்கு தாராளமாக அருளியிருக்கின்றார்”, என்று கூறினார். கடவுள் அவருடைய அரசுரி மையை தான் நாடுகின்றவருக்கு வழங்கு கின்றார். கடவுள் தாராளமானவர். எல்லாம் அறிந்தவர்.
[2:246] மோஸஸிற்குப் பின்னர் இஸ்ரவேலர்களின் தலைவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? அவர்கள் “எங்களை வழி நடத்த ஒரு அரசனை நீங்கள் நியமித்தால் நாங்கள் கடவுள்-க்காக போராடுவோம்”, என்று தங்களுடைய வேதம் வழங்கப்பட்டவரிடம் கூறினார்கள். அவர், “போர் உங்கள் மீது விதிக்கப்பட்டால் போரிடக்கூடாது என்பது உங்களது நோக்கமா”? என்று கூறினார். அவர்கள், “எங்கள் வீடுகளையும் மேலும் எங்கள் குழந்தைகளையும் நாங்கள் இழந்து விட்ட போது, நாங்கள் ஏன் கடவுள்-க்காக போரிடக் கூடாது? என்று கூறினார்கள். இருப்பினும் போர் அவர்கள் மீது விதிக்கப்பட்ட போது சிலரைத் தவிர மற்றவர்கள் திரும்பி சென்று விட்டார்கள். வரம்பு மீறுபவர்களை கடவுள் அறிந்தவராக இருக்கிறார்.
[2:248] அவர்களுடைய வேதம் வழங்கப்பட்டவர் அவர்களிடம், “அவருடைய அரசுரிமைக்கு அடையாளமாக உடன்படிக்கை பேழை உங்களிடம் திரும்ப வந்து சேரும், உங்கள் இரட்சகரிடமிருந்து உறுதிப்பாட்டை கொண்டு வரும். மேலும் மோஸஸின் மக்களும், ஆரோனின் மக்களும் விட்டுச் சென்ற நினைவுச் சின்னங்கள் உங்களை வந்தடையும். அது வானவர்களால் சுமக்கப்படும். நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கையாளர்களாக இருந்தால், இது உங்களுக்கு திருப்திதரும் அடையாளமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.