Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:246 — பசுங்கன்று

மோஸஸிற்குப் பின்னர் இஸ்ரவேலர்களின் தலைவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? அவர்கள் “எங்களை வழி நடத்த ஒரு அரசனை நீங்கள் நியமித்தால் நாங்கள் கடவுள்-க்காக போராடுவோம்”, என்று தங்களுடைய வேதம் வழங்கப்பட்டவரிடம் கூறினார்கள். அவர், “போர் உங்கள் மீது விதிக்கப்பட்டால் போரிடக்கூடாது என்பது உங்களது நோக்கமா”? என்று கூறினார். அவர்கள், “எங்கள் வீடுகளையும் மேலும் எங்கள் குழந்தைகளையும் நாங்கள் இழந்து விட்ட போது, நாங்கள் ஏன் கடவுள்-க்காக போரிடக் கூடாது? என்று கூறினார்கள். இருப்பினும் போர் அவர்கள் மீது விதிக்கப்பட்ட போது சிலரைத் தவிர மற்றவர்கள் திரும்பி சென்று விட்டார்கள். வரம்பு மீறுபவர்களை கடவுள் அறிந்தவராக இருக்கிறார்.

[2:245] பன்மடங்காகப் பெருகி திரும்ப அவர்களுக்கே கிடைக்கக்கூடிய, நன்னெறி என்னும் கடனை கடவுள்-க்கு கொடுப்பவர்கள் யார்? கடவுள் தான் கொடுப்பவராகவும், நிறுத்திவைப் பவராகவும் இருக்கின்றார். மேலும் நீங்கள் அவரிடமே திரும்புவீர்கள்.

[2:247] “கடவுள் தாலூத்தை (சவுல்) உங்களுக்கு அரசராக நியமித்திருக்கின்றார்”, என்று அவர் களுடைய வேதம் வழங்கப்பட்டவர் அவர் களிடம் கூறினார். அவர்கள், “அவரை விட அரசுரிமைக்கு நாங்கள் அதிக தகுதியுடைய வர்களாக இருக்கும் போது எவ்வாறு அவர் எங்கள் மீது அரசுரிமை கொள்ள இயலும், அவர் செல்வந்தர் கூட இல்லையே?”, என்று கூறினார்கள். அவர், “உங்களுக்கு மேலாக கடவுள் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார். மேலும் அறிவாற்றலிலும் உடல் வலிமையிலும் அவருக்கு தாராளமாக அருளியிருக்கின்றார்”, என்று கூறினார். கடவுள் அவருடைய அரசுரி மையை தான் நாடுகின்றவருக்கு வழங்கு கின்றார். கடவுள் தாராளமானவர். எல்லாம் அறிந்தவர்.