Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:257 — பசுங்கன்று

கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுடைய இரட்சகர், அவர் அவர்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் வழி நடத்துகின்றார். நம்ப மறுப்பவர்களை பொறுத்தமட்டில் அவர் களுடைய இரட்சகர்கள் அவர்களுடைய இணைத் தெய்வங்களே, அவை அவர்களை ஒளியில் இருந்து வெளியேற்றி இருளின் பால் வழி நடத்துகின்றன. அவர்கள் நரகவாசிகளாவார் கள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.

[2:256] மார்க்கத்தில் நிர்பந்தம் இருக்கக்கூடாது: சரியான பாதை, தவறான பாதையை விட்டும் முற்றிலும் பிரிக்கப்பட்டுவிட்டது. எவர் ஒருவர் சாத்தானுக்கு எதிராகப் பேசி, மேலும் கடவுள்-ன் மீது நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் ஒரு உறுதியான பிடிமானத்தை பிடித்துக் கொண்டார்; அது ஒரு போதும் உடைவதில்லை. கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[2:258] கடவுள் அவனுக்கு அரசுரிமையை தந்திருந்த போதிலும், ஆப்ரஹாமிடம் அவருடைய இரட்சகரைப் பற்றி தர்க்கம் செய்த ஒருவனை நீர் கவனித்திருக்கின்றீரா?, ஆப்ரஹாம்,“என் இரட்சகர் வாழ்வையும் மரணத்தையும் வழங்கு கின்றார்”, என்று கூறினார். அவன், “நானும் வாழ்வையும் மரணத்தையும் வழங்குகின்றேன்”, என்று கூறினான். ஆப்ரஹாம், “கடவுள் சூரியனை கிழக்கில் இருந்து கொண்டு வருகின்றார், அதை மேற்கிலிருந்து உன்னால் கொண்டு வர முடியுமா?”, என்று கேட்டார். நம்பமறுத்தவன் வாயடைத்துப்போனான். தீயவர்களை கடவுள் வழி நடத்துவதில்லை.