குர்ஆன் 2:258 — பசுங்கன்று
கடவுள் அவனுக்கு அரசுரிமையை தந்திருந்த போதிலும், ஆப்ரஹாமிடம் அவருடைய இரட்சகரைப் பற்றி தர்க்கம் செய்த ஒருவனை நீர் கவனித்திருக்கின்றீரா?, ஆப்ரஹாம்,“என் இரட்சகர் வாழ்வையும் மரணத்தையும் வழங்கு கின்றார்”, என்று கூறினார். அவன், “நானும் வாழ்வையும் மரணத்தையும் வழங்குகின்றேன்”, என்று கூறினான். ஆப்ரஹாம், “கடவுள் சூரியனை கிழக்கில் இருந்து கொண்டு வருகின்றார், அதை மேற்கிலிருந்து உன்னால் கொண்டு வர முடியுமா?”, என்று கேட்டார். நம்பமறுத்தவன் வாயடைத்துப்போனான். தீயவர்களை கடவுள் வழி நடத்துவதில்லை.
[2:257] கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுடைய இரட்சகர், அவர் அவர்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் வழி நடத்துகின்றார். நம்ப மறுப்பவர்களை பொறுத்தமட்டில் அவர் களுடைய இரட்சகர்கள் அவர்களுடைய இணைத் தெய்வங்களே, அவை அவர்களை ஒளியில் இருந்து வெளியேற்றி இருளின் பால் வழி நடத்துகின்றன. அவர்கள் நரகவாசிகளாவார் கள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
[2:259] பாழடைந்த ஒரு நகரை கடந்த போது ஒருவர், இது இறந்து விட்ட பின்னர் இதை எப்படி கடவுள்-ஆல் மீண்டும் உயிர்ப்பிக்க இயலும் என்று வியந்ததை எண்ணிப்பாருங்கள். அதன் பிறகு கடவுள் அவரை நூறு வருடங்கள் மரணத்தில் ஆழ்த்தினார் . பின் அவரை மீண்டும் உயிர்ப் பித்தார், அவர், “எவ்வளவு காலம் நீர் இங்கு தங்கி இருந்தீர்”, என்று கூறினார். அவர், “நான் இங்கே ஒரு நாளோ அல்லது நாளின் ஒரு பகுதியோ இருந்தேன்”, என்று கூறினார். அவர், “இல்லை நீர் இங்கே நூறு வருடங்கள் இருந்தீர். ஆயினும் உமது உணவையும் பானத்தையும் பாரும், அவை கெட்டுப் போகவில்லை. உம்முடைய கழுதையைப் பாரும் - இவ்வாறு நாம் உம்மை மக்களுக்கு ஒரு பாடமாக ஆக்கியுள்ளோம். இப்போது, எலும்புகளை நாம் எவ்வாறு கட்டுகின்றோம் என்பதையும் அதன்பிறகு சதைகளால் அவற்றை மூடுவதையும் கவனியும்,” என்று கூறினார். என்ன நடந்தது என்பதை அவர் தெளிவாக உணர்ந்த போது, அவர், “கடவுள் சர்வ சக்தியுடையவர் என்பதை இப்போது நான் அறிந்து கொண்டேன்”, என்று கூறினார்.