Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:259 — பசுங்கன்று

أَو كَالَّذى مَرَّ عَلىٰ قَريَةٍ وَهِىَ خاوِيَةٌ عَلىٰ عُروشِها قالَ أَنّىٰ يُحيۦ هٰذِهِ اللَّهُ بَعدَ مَوتِها ۖ فَأَماتَهُ اللَّهُ مِا۟ئَةَ عامٍ ثُمَّ بَعَثَهُ ۖ قالَ كَم لَبِثتَ ۖ قالَ لَبِثتُ يَومًا أَو بَعضَ يَومٍ ۖ قالَ بَل لَبِثتَ مِا۟ئَةَ عامٍ فَانظُر إِلىٰ طَعامِكَ وَشَرابِكَ لَم يَتَسَنَّه ۖ وَانظُر إِلىٰ حِمارِكَ وَلِنَجعَلَكَ ءايَةً لِلنّاسِ ۖ وَانظُر إِلَى العِظامِ كَيفَ نُنشِزُها ثُمَّ نَكسوها لَحمًا ۚ فَلَمّا تَبَيَّنَ لَهُ قالَ أَعلَمُ أَنَّ اللَّهَ عَلىٰ كُلِّ شَيءٍ قَديرٌ

பாழடைந்த ஒரு நகரை கடந்த போது ஒருவர், இது இறந்து விட்ட பின்னர் இதை எப்படி கடவுள்-ஆல் மீண்டும் உயிர்ப்பிக்க இயலும் என்று வியந்ததை எண்ணிப்பாருங்கள். அதன் பிறகு கடவுள் அவரை நூறு வருடங்கள் மரணத்தில் ஆழ்த்தினார் . பின் அவரை மீண்டும் உயிர்ப் பித்தார், அவர், “எவ்வளவு காலம் நீர் இங்கு தங்கி இருந்தீர்”, என்று கூறினார். அவர், “நான் இங்கே ஒரு நாளோ அல்லது நாளின் ஒரு பகுதியோ இருந்தேன்”, என்று கூறினார். அவர், “இல்லை நீர் இங்கே நூறு வருடங்கள் இருந்தீர். ஆயினும் உமது உணவையும் பானத்தையும் பாரும், அவை கெட்டுப் போகவில்லை. உம்முடைய கழுதையைப் பாரும் - இவ்வாறு நாம் உம்மை மக்களுக்கு ஒரு பாடமாக ஆக்கியுள்ளோம். இப்போது, எலும்புகளை நாம் எவ்வாறு கட்டுகின்றோம் என்பதையும் அதன்பிறகு சதைகளால் அவற்றை மூடுவதையும் கவனியும்,” என்று கூறினார். என்ன நடந்தது என்பதை அவர் தெளிவாக உணர்ந்த போது, அவர், “கடவுள் சர்வ சக்தியுடையவர் என்பதை இப்போது நான் அறிந்து கொண்டேன்”, என்று கூறினார்.

[2:258] கடவுள் அவனுக்கு அரசுரிமையை தந்திருந்த போதிலும், ஆப்ரஹாமிடம் அவருடைய இரட்சகரைப் பற்றி தர்க்கம் செய்த ஒருவனை நீர் கவனித்திருக்கின்றீரா?, ஆப்ரஹாம்,“என் இரட்சகர் வாழ்வையும் மரணத்தையும் வழங்கு கின்றார்”, என்று கூறினார். அவன், “நானும் வாழ்வையும் மரணத்தையும் வழங்குகின்றேன்”, என்று கூறினான். ஆப்ரஹாம், “கடவுள் சூரியனை கிழக்கில் இருந்து கொண்டு வருகின்றார், அதை மேற்கிலிருந்து உன்னால் கொண்டு வர முடியுமா?”, என்று கேட்டார். நம்பமறுத்தவன் வாயடைத்துப்போனான். தீயவர்களை கடவுள் வழி நடத்துவதில்லை.

[2:260] ஆப்ரஹாம், “என்னுடைய இரட்சகரே, இறந்த வற்றை நீர் எவ்வாறு மீண்டும் உயிர்ப்பிக்கின்றீர் என்பதை எனக்கு காட்டும்” என்று கூறினார். அவர், “நீர் நம்ப வில்லையா?” என்று கூறினார். அவர், “ஆம், ஆனால் என் உள்ளத்தை உறுதிப்படுத்த நான் விரும்புகின்றேன்”, என்று கூறினார். அவர், “நான்கு பறவைகளை எடுத்து அவற்றின் அடையாளங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு பறவையின் ஒரு பகுதியை எடுத்து ஒரு மலையின் உச்சியின் மேல் வைத்துவிட்டு, பின்னர் அவற்றை உம்மிடம் அழைப்பீராக. அவை உம்மிடம் விரைந்து வரும், கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர் என்பதை நீர் அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.