Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:260 — பசுங்கன்று

ஆப்ரஹாம், “என்னுடைய இரட்சகரே, இறந்த வற்றை நீர் எவ்வாறு மீண்டும் உயிர்ப்பிக்கின்றீர் என்பதை எனக்கு காட்டும்” என்று கூறினார். அவர், “நீர் நம்ப வில்லையா?” என்று கூறினார். அவர், “ஆம், ஆனால் என் உள்ளத்தை உறுதிப்படுத்த நான் விரும்புகின்றேன்”, என்று கூறினார். அவர், “நான்கு பறவைகளை எடுத்து அவற்றின் அடையாளங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு பறவையின் ஒரு பகுதியை எடுத்து ஒரு மலையின் உச்சியின் மேல் வைத்துவிட்டு, பின்னர் அவற்றை உம்மிடம் அழைப்பீராக. அவை உம்மிடம் விரைந்து வரும், கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர் என்பதை நீர் அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

[2:259] பாழடைந்த ஒரு நகரை கடந்த போது ஒருவர், இது இறந்து விட்ட பின்னர் இதை எப்படி கடவுள்-ஆல் மீண்டும் உயிர்ப்பிக்க இயலும் என்று வியந்ததை எண்ணிப்பாருங்கள். அதன் பிறகு கடவுள் அவரை நூறு வருடங்கள் மரணத்தில் ஆழ்த்தினார் . பின் அவரை மீண்டும் உயிர்ப் பித்தார், அவர், “எவ்வளவு காலம் நீர் இங்கு தங்கி இருந்தீர்”, என்று கூறினார். அவர், “நான் இங்கே ஒரு நாளோ அல்லது நாளின் ஒரு பகுதியோ இருந்தேன்”, என்று கூறினார். அவர், “இல்லை நீர் இங்கே நூறு வருடங்கள் இருந்தீர். ஆயினும் உமது உணவையும் பானத்தையும் பாரும், அவை கெட்டுப் போகவில்லை. உம்முடைய கழுதையைப் பாரும் - இவ்வாறு நாம் உம்மை மக்களுக்கு ஒரு பாடமாக ஆக்கியுள்ளோம். இப்போது, எலும்புகளை நாம் எவ்வாறு கட்டுகின்றோம் என்பதையும் அதன்பிறகு சதைகளால் அவற்றை மூடுவதையும் கவனியும்,” என்று கூறினார். என்ன நடந்தது என்பதை அவர் தெளிவாக உணர்ந்த போது, அவர், “கடவுள் சர்வ சக்தியுடையவர் என்பதை இப்போது நான் அறிந்து கொண்டேன்”, என்று கூறினார்.

[2:261] கடவுள்-க்காக தங்கள் பணத்தை செலவு செய்பவர்களுக்கு உதாரணம் ஒவ்வொரு கதிரிலும், நூறு தானியங்களோடு ஏழு கதிர் களை முளைப்பிக்கும் ஒரு தானியம் போன்றது. கடவுள் தான் நாடுகின்றவருக்கு இதனை பன்மடங்காகப் பெருக்குகின்றார். கடவுள் தாராளமானவர், அறிந்தவர்.