குர்ஆன் 2:261 — பசுங்கன்று
கடவுள்-க்காக தங்கள் பணத்தை செலவு செய்பவர்களுக்கு உதாரணம் ஒவ்வொரு கதிரிலும், நூறு தானியங்களோடு ஏழு கதிர் களை முளைப்பிக்கும் ஒரு தானியம் போன்றது. கடவுள் தான் நாடுகின்றவருக்கு இதனை பன்மடங்காகப் பெருக்குகின்றார். கடவுள் தாராளமானவர், அறிந்தவர்.
[2:260] ஆப்ரஹாம், “என்னுடைய இரட்சகரே, இறந்த வற்றை நீர் எவ்வாறு மீண்டும் உயிர்ப்பிக்கின்றீர் என்பதை எனக்கு காட்டும்” என்று கூறினார். அவர், “நீர் நம்ப வில்லையா?” என்று கூறினார். அவர், “ஆம், ஆனால் என் உள்ளத்தை உறுதிப்படுத்த நான் விரும்புகின்றேன்”, என்று கூறினார். அவர், “நான்கு பறவைகளை எடுத்து அவற்றின் அடையாளங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு பறவையின் ஒரு பகுதியை எடுத்து ஒரு மலையின் உச்சியின் மேல் வைத்துவிட்டு, பின்னர் அவற்றை உம்மிடம் அழைப்பீராக. அவை உம்மிடம் விரைந்து வரும், கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர் என்பதை நீர் அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
[2:262] எவர்கள் கடவுள்-க்காக தங்கள் பணத்தை செலவு செய்து, பின்னர் அந்த தர்மத்தை தொடர்ந்து அவமரியாதையோ, அல்லது தீங்கோ செய்யாமல் இருந்தால் அவர்கள் தங்கள் வெகுமதியை தங்கள் இரட்சகரிடமிருந்து பெறுவார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.