Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:262 — பசுங்கன்று

எவர்கள் கடவுள்-க்காக தங்கள் பணத்தை செலவு செய்து, பின்னர் அந்த தர்மத்தை தொடர்ந்து அவமரியாதையோ, அல்லது தீங்கோ செய்யாமல் இருந்தால் அவர்கள் தங்கள் வெகுமதியை தங்கள் இரட்சகரிடமிருந்து பெறுவார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

[2:261] கடவுள்-க்காக தங்கள் பணத்தை செலவு செய்பவர்களுக்கு உதாரணம் ஒவ்வொரு கதிரிலும், நூறு தானியங்களோடு ஏழு கதிர் களை முளைப்பிக்கும் ஒரு தானியம் போன்றது. கடவுள் தான் நாடுகின்றவருக்கு இதனை பன்மடங்காகப் பெருக்குகின்றார். கடவுள் தாராளமானவர், அறிந்தவர்.

[2:263] தொடர்ந்த அவமரியாதையோடு செய்யும் தர்மத்தைக் காட்டிலும், கனிவான வார்த்தை களும், இரக்கமும் சிறந்ததாகும். கடவுள் செல்வந்தர், இரக்கமிக்கவர்.