குர்ஆன் 2:263 — பசுங்கன்று
தொடர்ந்த அவமரியாதையோடு செய்யும் தர்மத்தைக் காட்டிலும், கனிவான வார்த்தை களும், இரக்கமும் சிறந்ததாகும். கடவுள் செல்வந்தர், இரக்கமிக்கவர்.
[2:262] எவர்கள் கடவுள்-க்காக தங்கள் பணத்தை செலவு செய்து, பின்னர் அந்த தர்மத்தை தொடர்ந்து அவமரியாதையோ, அல்லது தீங்கோ செய்யாமல் இருந்தால் அவர்கள் தங்கள் வெகுமதியை தங்கள் இரட்சகரிடமிருந்து பெறுவார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
[2:264] நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-ஐயும் இறுதி நாளையும் நம்பாத நிலையில் பிறருக்கு காட்டிக் கொள்வதற்காக தன்னுடைய பணத்தை செலவு செய்பவனைப் போல், நிந்தனையாலும், அவமரியாதையாலும் துன்புறுத்தி உங்கள் தர்மத்தை நீங்கள் பயனற்றதாக்கி விடாதீர்கள். அவனுக்கு உதாரணம் மெல்லிய மண்படலத் தினால் மூடப்பட்ட ஒரு பாறையைப் போன்ற தாகும், கனமழை பெய்தவுடன் அது அந்த மண்ணை கழுவி அதை ஒரு உபயோகமற்ற பாறையாக விட்டு விடுகின்றது. அவர்கள் தங்கள் முயற்சியினால் எந்த லாபமும் அடைவதில்லை. நம்பமறுக்கும் மக்களை கடவுள் வழி நடத்துவதில்லை.