குர்ஆன் 2:264 — பசுங்கன்று
நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-ஐயும் இறுதி நாளையும் நம்பாத நிலையில் பிறருக்கு காட்டிக் கொள்வதற்காக தன்னுடைய பணத்தை செலவு செய்பவனைப் போல், நிந்தனையாலும், அவமரியாதையாலும் துன்புறுத்தி உங்கள் தர்மத்தை நீங்கள் பயனற்றதாக்கி விடாதீர்கள். அவனுக்கு உதாரணம் மெல்லிய மண்படலத் தினால் மூடப்பட்ட ஒரு பாறையைப் போன்ற தாகும், கனமழை பெய்தவுடன் அது அந்த மண்ணை கழுவி அதை ஒரு உபயோகமற்ற பாறையாக விட்டு விடுகின்றது. அவர்கள் தங்கள் முயற்சியினால் எந்த லாபமும் அடைவதில்லை. நம்பமறுக்கும் மக்களை கடவுள் வழி நடத்துவதில்லை.
[2:263] தொடர்ந்த அவமரியாதையோடு செய்யும் தர்மத்தைக் காட்டிலும், கனிவான வார்த்தை களும், இரக்கமும் சிறந்ததாகும். கடவுள் செல்வந்தர், இரக்கமிக்கவர்.
[2:265] கடவுள்-ன் பொருத்தத்தை தேடி, உண்மையான உறுதிப்பாட்டுடன் தங்கள் பணத்தை செலவு செய்பவர்களின் உதாரணமானது, உயர்ந்த வளமான மண்ணின் மேல் இருக்கும் ஒரு தோட்டம் போன்றதாகும்; கனமழை பெய்யும் போது அது இரு மடங்கு விளைச்சல் தருகின்றது, கனமழை இல்லை என்றாலும் ஒரு தூறல் அதற்குப் போதுமானது. நீங்கள் செய்யும் அனைத்தையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.