குர்ஆன் 2:265 — பசுங்கன்று
கடவுள்-ன் பொருத்தத்தை தேடி, உண்மையான உறுதிப்பாட்டுடன் தங்கள் பணத்தை செலவு செய்பவர்களின் உதாரணமானது, உயர்ந்த வளமான மண்ணின் மேல் இருக்கும் ஒரு தோட்டம் போன்றதாகும்; கனமழை பெய்யும் போது அது இரு மடங்கு விளைச்சல் தருகின்றது, கனமழை இல்லை என்றாலும் ஒரு தூறல் அதற்குப் போதுமானது. நீங்கள் செய்யும் அனைத்தையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.
[2:264] நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-ஐயும் இறுதி நாளையும் நம்பாத நிலையில் பிறருக்கு காட்டிக் கொள்வதற்காக தன்னுடைய பணத்தை செலவு செய்பவனைப் போல், நிந்தனையாலும், அவமரியாதையாலும் துன்புறுத்தி உங்கள் தர்மத்தை நீங்கள் பயனற்றதாக்கி விடாதீர்கள். அவனுக்கு உதாரணம் மெல்லிய மண்படலத் தினால் மூடப்பட்ட ஒரு பாறையைப் போன்ற தாகும், கனமழை பெய்தவுடன் அது அந்த மண்ணை கழுவி அதை ஒரு உபயோகமற்ற பாறையாக விட்டு விடுகின்றது. அவர்கள் தங்கள் முயற்சியினால் எந்த லாபமும் அடைவதில்லை. நம்பமறுக்கும் மக்களை கடவுள் வழி நடத்துவதில்லை.
[2:266] உங்களில் யாராவது ஒருவனுக்கு ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட வளமான விளைச்சல்களோடு, பேரீத்த மரங்களும், திராட்சையும் கொண்ட ஒரு தோட்டம் சொந்தமாக இருந்து, பின்னர் அவன் வயது முதிர்ந்து, அதே சமயம் அவனது பிள்ளைகள் இன்னும் அவனைச் சார்ந்திருக்கும் நிலையில், ஒரு பேரழிவு தாக்கி மேலும் அவன் தோட்டம் எரிந்து போவதை விரும்புவானா? நீங்கள் சிந்திக்கும் பொருட்டு கடவுள் வெளிப்பாடுகளை இவ்விதமாக உங்களுக்கு தெளிவாக்குகின்றார்.