Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:266 — பசுங்கன்று

உங்களில் யாராவது ஒருவனுக்கு ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட வளமான விளைச்சல்களோடு, பேரீத்த மரங்களும், திராட்சையும் கொண்ட ஒரு தோட்டம் சொந்தமாக இருந்து, பின்னர் அவன் வயது முதிர்ந்து, அதே சமயம் அவனது பிள்ளைகள் இன்னும் அவனைச் சார்ந்திருக்கும் நிலையில், ஒரு பேரழிவு தாக்கி மேலும் அவன் தோட்டம் எரிந்து போவதை விரும்புவானா? நீங்கள் சிந்திக்கும் பொருட்டு கடவுள் வெளிப்பாடுகளை இவ்விதமாக உங்களுக்கு தெளிவாக்குகின்றார்.

[2:265] கடவுள்-ன் பொருத்தத்தை தேடி, உண்மையான உறுதிப்பாட்டுடன் தங்கள் பணத்தை செலவு செய்பவர்களின் உதாரணமானது, உயர்ந்த வளமான மண்ணின் மேல் இருக்கும் ஒரு தோட்டம் போன்றதாகும்; கனமழை பெய்யும் போது அது இரு மடங்கு விளைச்சல் தருகின்றது, கனமழை இல்லை என்றாலும் ஒரு தூறல் அதற்குப் போதுமானது. நீங்கள் செய்யும் அனைத்தையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.

[2:267] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் சம்பாதிக்கும் நல்ல பொருட்களில் இருந்தும், மேலும் பூமியி லிருந்து உங்களுக்காக நாம் உருவாக்கிய வற்றில் இருந்தும் நீங்கள் தானம் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுப்பதற்காக கெட்டவை களை, அவற்றில் இருந்து தேர்ந்தெடுக்காதீர்கள், அத்தகைய பொருட்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டால் உங்கள் கண்கள் மூடி இருந்தாலேயன்றி அவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். கடவுள் செல்வந்தர், புகழுக்குரியவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.