குர்ஆன் 2:27 — பசுங்கன்று
கடவுள்-ன் உடன்படிக்கையை உறுதியாகக் கடைப்பிடிப்பதாக வாக்களித்து விட்டு பின்னர் அதனை மீறுபவர்கள், சேர்த்து வைக்கும்படி கடவுள் கட்டளையிட்டிருப்பதை துண்டித்து விடுபவர்கள், மேலும் தீமைப் புரிகின்றவர்கள். இவர்கள்தான் நஷ்டவாளிகள்.
[2:26] மிகச் சிறிய கொசு முதல் அதைவிடப் பெரியதான எந்த விதமான உதாரணத்தை* எடுத்துக் கூறுவதிலிருந்தும் கடவுள் வெட்கப் படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை, இது தங்களுடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் என்பதை அவர்கள் அறிவார்கள், நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை அவர்கள் “இத்தகையதொரு உதாரணத்தைக் கொண்டு கடவுள் கூற நாடுவது என்ன? என்று கூறுகின்றார்கள். அதன் மூலமாக அவர் பலரை வழிதவறச் செய்கின்றார், மேலும் பலரை வழிநடத்துகின்றார். ஆனால் அதன் மூலமாக தீயவர்களைத்தவிர எவரையும் அவர் ஒருபோதும் வழிதவறும்படி செய்வதில்லை,
[2:28] நீங்கள் மரணித்தவர்களாக இருந்தபொழுது அவர் உங்களுக்கு வாழ்வு அளித்தார், பின்னர் உங்களை மரணத்தில் ஆழ்த்துகின்றார், பின்னர் உங்களை மீண்டும் வாழ்விற்கு கொண்டுவருகின்றார், பின்னர் அவரிடமே நீங்கள் இறுதியாகத் திரும்ப வேண்டி இருக்கும் பொழுது எவ்வாறு நீங்கள் கடவுள்-ஐ நம்ப மறுக்க இயலும்?