Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:31 — பசுங்கன்று

அவர் ஆதாமிற்கு பெயர்கள்* அனைத்தையும் கற்றுக்கொடுத்தார், பின்னர் வானவர்களிடம் “நீங்கள் சரியானவர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்குத் தாருங்கள்” என்று கூறியவராக அவற்றை எடுத்து வைத்தார்.

[2:30] உமது இரட்சகர் வானவர்களிடம், “பூமியில் ஒரு பிரதிநிதியை (ஒரு தற்காலிக தெய்வம்) நான் அமைக்கின்றேன்,” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள், “நாங்கள் உம் புகழினைப் பாடிக்கொண்டும், உம்மைத் துதித்துக் கொண்டும், உமது முழுமையான அதிகாரத்தை உறுதியாகக் கடைப்பிடித்துக் கொண்டும் இருக்கும்பொழுது, தீமையைப் பரப்பி மேலும் இரத்தம் சிந்த வைப்பவனையா அங்கு நீர் அமர்த்தப்போகின்றீர்? என்று கூறினார்கள். அவர் “நீங்கள் அறியாததை நான் அறிவேன்” என்று கூறினார்.

[2:32] அவர்கள், “நீரே துதிப்பிற்குரியவர், நீர் எங்களுக்கு கற்பித்தவற்றைத் தவிர எங்களுக்கு எந்த அறிவும் இல்லை, நீரே எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.” என்று கூறினார்கள்.