குர்ஆன் 2:32 — பசுங்கன்று
அவர்கள், “நீரே துதிப்பிற்குரியவர், நீர் எங்களுக்கு கற்பித்தவற்றைத் தவிர எங்களுக்கு எந்த அறிவும் இல்லை, நீரே எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.” என்று கூறினார்கள்.
[2:31] அவர் ஆதாமிற்கு பெயர்கள்* அனைத்தையும் கற்றுக்கொடுத்தார், பின்னர் வானவர்களிடம் “நீங்கள் சரியானவர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்குத் தாருங்கள்” என்று கூறியவராக அவற்றை எடுத்து வைத்தார்.
[2:33] அவர், “ஆதாமே, அவற்றின் பெயர்களை அவர்களுக்கு கூறுவீராக,” என்று கூறினார். அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு கூறியபொழுது, அவர், “வானங்கள் மற்றும் பூமியின் இரகசியங்களை நான் அறிவேன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? நீங்கள் அறிவிப்பவற்றையும் மேலும் நீங்கள் மறைப்பவற்றையும் நான் அறிவேன்” என்று கூறினார்.