குர்ஆன் 2:30 — பசுங்கன்று
உமது இரட்சகர் வானவர்களிடம், “பூமியில் ஒரு பிரதிநிதியை (ஒரு தற்காலிக தெய்வம்) நான் அமைக்கின்றேன்,” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள், “நாங்கள் உம் புகழினைப் பாடிக்கொண்டும், உம்மைத் துதித்துக் கொண்டும், உமது முழுமையான அதிகாரத்தை உறுதியாகக் கடைப்பிடித்துக் கொண்டும் இருக்கும்பொழுது, தீமையைப் பரப்பி மேலும் இரத்தம் சிந்த வைப்பவனையா அங்கு நீர் அமர்த்தப்போகின்றீர்? என்று கூறினார்கள். அவர் “நீங்கள் அறியாததை நான் அறிவேன்” என்று கூறினார்.
[2:29] அவர்தான் பூமியில் மீது ஒவ்வொன்றையும் உங்களுக்காகப் படைத்தார், பின்னர் வானத்தின் பால் திரும்பி, அங்கு* ஏழு பிரபஞ் சங்களை குறையின்றிச் செய்து முடித்தார், மேலும் அவர் எல்லா விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[2:31] அவர் ஆதாமிற்கு பெயர்கள்* அனைத்தையும் கற்றுக்கொடுத்தார், பின்னர் வானவர்களிடம் “நீங்கள் சரியானவர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்குத் தாருங்கள்” என்று கூறியவராக அவற்றை எடுத்து வைத்தார்.