Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:29 — பசுங்கன்று

அவர்தான் பூமியில் மீது ஒவ்வொன்றையும் உங்களுக்காகப் படைத்தார், பின்னர் வானத்தின் பால் திரும்பி, அங்கு* ஏழு பிரபஞ் சங்களை குறையின்றிச் செய்து முடித்தார், மேலும் அவர் எல்லா விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[2:28] நீங்கள் மரணித்தவர்களாக இருந்தபொழுது அவர் உங்களுக்கு வாழ்வு அளித்தார், பின்னர் உங்களை மரணத்தில் ஆழ்த்துகின்றார், பின்னர் உங்களை மீண்டும் வாழ்விற்கு கொண்டுவருகின்றார், பின்னர் அவரிடமே நீங்கள் இறுதியாகத் திரும்ப வேண்டி இருக்கும் பொழுது எவ்வாறு நீங்கள் கடவுள்-ஐ நம்ப மறுக்க இயலும்?

[2:30] உமது இரட்சகர் வானவர்களிடம், “பூமியில் ஒரு பிரதிநிதியை (ஒரு தற்காலிக தெய்வம்) நான் அமைக்கின்றேன்,” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள், “நாங்கள் உம் புகழினைப் பாடிக்கொண்டும், உம்மைத் துதித்துக் கொண்டும், உமது முழுமையான அதிகாரத்தை உறுதியாகக் கடைப்பிடித்துக் கொண்டும் இருக்கும்பொழுது, தீமையைப் பரப்பி மேலும் இரத்தம் சிந்த வைப்பவனையா அங்கு நீர் அமர்த்தப்போகின்றீர்? என்று கூறினார்கள். அவர் “நீங்கள் அறியாததை நான் அறிவேன்” என்று கூறினார்.