Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:34 — பசுங்கன்று

“ஆதாமின் முன்னே சிரம் பணியுங்கள்,” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, அவர்கள் சிரம் பணிந்தனர், சாத்தானைத் தவிர; அவன் மறுத்தான், மிகவும் ஆணவம் கொண்டவனாகவும், மேலும் ஒரு நம்ப மறுப்பவனாகவும் இருந்தான்.

[2:33] அவர், “ஆதாமே, அவற்றின் பெயர்களை அவர்களுக்கு கூறுவீராக,” என்று கூறினார். அவர் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு கூறியபொழுது, அவர், “வானங்கள் மற்றும் பூமியின் இரகசியங்களை நான் அறிவேன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? நீங்கள் அறிவிப்பவற்றையும் மேலும் நீங்கள் மறைப்பவற்றையும் நான் அறிவேன்” என்று கூறினார்.

[2:35] நாம், “ஆதாமே, உமது மனைவியுடன் சுவனத்தில் வசிப்பீராக, மேலும் நீங்கள் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக உண்ணுவீராக, மேலும் நீங்கள் பாவம் செய்யாமலிருக்கும் பொருட்டு, இந்த மரத்தை நெருங்காதிருப்பீராக” என்று கூறினோம்.