குர்ஆன் 2:35 — பசுங்கன்று
நாம், “ஆதாமே, உமது மனைவியுடன் சுவனத்தில் வசிப்பீராக, மேலும் நீங்கள் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக உண்ணுவீராக, மேலும் நீங்கள் பாவம் செய்யாமலிருக்கும் பொருட்டு, இந்த மரத்தை நெருங்காதிருப்பீராக” என்று கூறினோம்.
[2:34] “ஆதாமின் முன்னே சிரம் பணியுங்கள்,” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, அவர்கள் சிரம் பணிந்தனர், சாத்தானைத் தவிர; அவன் மறுத்தான், மிகவும் ஆணவம் கொண்டவனாகவும், மேலும் ஒரு நம்ப மறுப்பவனாகவும் இருந்தான்.
[2:36] ஆனால் சாத்தான் அவர்களை ஏமாற்றி விட்டான், மேலும் அங்கிருந்து அவர்கள் வெளியேறக் காரணமாகிவிட்டான். நாம், “ஒருவருக்கொருவர் விரோதிகளாகக் கீழே செல்லுங்கள். சிறிதொரு காலத்திற்காக உங்களுடைய வசிப்பிடமும், மற்றும் வாழ்வாதாரமும் பூமியின் மீது இருக்க வேண்டும்”, என்று கூறினோம்.