Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:36 — பசுங்கன்று

ஆனால் சாத்தான் அவர்களை ஏமாற்றி விட்டான், மேலும் அங்கிருந்து அவர்கள் வெளியேறக் காரணமாகிவிட்டான். நாம், “ஒருவருக்கொருவர் விரோதிகளாகக் கீழே செல்லுங்கள். சிறிதொரு காலத்திற்காக உங்களுடைய வசிப்பிடமும், மற்றும் வாழ்வாதாரமும் பூமியின் மீது இருக்க வேண்டும்”, என்று கூறினோம்.

[2:35] நாம், “ஆதாமே, உமது மனைவியுடன் சுவனத்தில் வசிப்பீராக, மேலும் நீங்கள் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக உண்ணுவீராக, மேலும் நீங்கள் பாவம் செய்யாமலிருக்கும் பொருட்டு, இந்த மரத்தை நெருங்காதிருப்பீராக” என்று கூறினோம்.

[2:37] பின்னர், ஆதாம் தன்னுடைய இரட்சகரிட மிருந்து வார்த்தைகளைப் பெற்றுக் கொண்டார், அதன் மூலம் அவர் தன்னை மீட்டுக் கொண்டார். அவர் தான் மீட்சி அளிப்பவர், மிக்க கருணையாளர்.