குர்ஆன் 2:37 — பசுங்கன்று
பின்னர், ஆதாம் தன்னுடைய இரட்சகரிட மிருந்து வார்த்தைகளைப் பெற்றுக் கொண்டார், அதன் மூலம் அவர் தன்னை மீட்டுக் கொண்டார். அவர் தான் மீட்சி அளிப்பவர், மிக்க கருணையாளர்.
[2:36] ஆனால் சாத்தான் அவர்களை ஏமாற்றி விட்டான், மேலும் அங்கிருந்து அவர்கள் வெளியேறக் காரணமாகிவிட்டான். நாம், “ஒருவருக்கொருவர் விரோதிகளாகக் கீழே செல்லுங்கள். சிறிதொரு காலத்திற்காக உங்களுடைய வசிப்பிடமும், மற்றும் வாழ்வாதாரமும் பூமியின் மீது இருக்க வேண்டும்”, என்று கூறினோம்.
[2:38] நாம் கூறினோம், “நீங்கள் அனைவரும் இங்கிருந்து கீழே செல்லுங்கள். என்னிடமிருந்து வழிகாட்டல் உங்களுக்கு வருகின்றபொழுது, என்னுடைய வழிகாட்டலைப் பின்பற்றுபவர்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.