குர்ஆன் 2:48 — பசுங்கன்று
எந்த ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவிற்கு உதவி செய்ய இயலாத, எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத, எந்த ஈட்டுத் தொகையும் செலுத்த இயலாத, அன்றி எவரொருவரும் உதவி செய்யப்பட இயலாத அந்த நாள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்.
[2:47] இஸ்ரவேலின் சந்ததியினரே, நான் உங்களுக்குச் செய்த உதவிகளையும் மேலும் மற்றெந்த மக்களையும் விட அதிகமாக உங்களுக்கு அருள் புரிந்ததையும் நினைவில் கொள்ளுங்கள்.
[2:49] உங்கள் மகன்களைக் கொலை செய்து மேலும் உங்கள் மகள்களை விட்டு வைத்து, உங்களை மிக மோசமான வேதனைக்கு உள்ளாக்கிய ஃபேரோவின் சமூகத்தாரிடம் இருந்து உங்களை நாம் காப்பாற்றியதை நினைவு கூருங்கள். அது உமது இரட்சகரிட மிருந்துள்ள ஒரு கடுமையான சோதனையாக இருந்தது.