குர்ஆன் 2:49 — பசுங்கன்று
உங்கள் மகன்களைக் கொலை செய்து மேலும் உங்கள் மகள்களை விட்டு வைத்து, உங்களை மிக மோசமான வேதனைக்கு உள்ளாக்கிய ஃபேரோவின் சமூகத்தாரிடம் இருந்து உங்களை நாம் காப்பாற்றியதை நினைவு கூருங்கள். அது உமது இரட்சகரிட மிருந்துள்ள ஒரு கடுமையான சோதனையாக இருந்தது.
[2:48] எந்த ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவிற்கு உதவி செய்ய இயலாத, எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத, எந்த ஈட்டுத் தொகையும் செலுத்த இயலாத, அன்றி எவரொருவரும் உதவி செய்யப்பட இயலாத அந்த நாள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்.
[2:50] உங்களுக்காக நாம் கடலைப் பிளந்ததை நினைவு கூருங்கள்; நாம் உங்களைக் காப்பாற்றி உங்கள் கண்களுக்கு எதிரிலேயே ஃபேரோவின் மக்களை மூழ்கடித்தோம்.