குர்ஆன் 2:66 — பசுங்கன்று
அவர்களுடைய தலைமுறையினருக்கும், அவர் களுக்குப் பின்னர் வந்த தலைமுறையினருக்கும் ஓர் உதாரணமாகவும், நன்னெறியாளர்களுக்கு ஓர் அறிவூட்டலாகவும் அவர்களை நாம் அமைத்தோம்.
[2:65] உங்களில் ஸப்பத்தின் புனிதத்தை மீறியவர் களை நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். “வாலில்லாக் குரங்குகளைப் போல இழிவடைந் தோராகி விடுங்கள்” என்று நாம் அவர்களிடம் கூறினோம்.
[2:67] மோஸஸ் தன் சமூகத்தாரிடம், “கடவுள் ஒரு பசுங்கன்றைப் பலியிடுமாறு உங்களுக்குக் கட்டளையிடுகின்றார்” என்று கூறினார். அவர்கள், “எங்களைக் கேலி செய்கின்றீரா?” என்று கூறினர். அவர், “அறிவில்லாத ஒருவரைப் போல் நான் நடந்து கொள்வதை விட்டும் கடவுள் காக்க வேண்டும்” என்று கூறினார்.