குர்ஆன் 2:67 — பசுங்கன்று
மோஸஸ் தன் சமூகத்தாரிடம், “கடவுள் ஒரு பசுங்கன்றைப் பலியிடுமாறு உங்களுக்குக் கட்டளையிடுகின்றார்” என்று கூறினார். அவர்கள், “எங்களைக் கேலி செய்கின்றீரா?” என்று கூறினர். அவர், “அறிவில்லாத ஒருவரைப் போல் நான் நடந்து கொள்வதை விட்டும் கடவுள் காக்க வேண்டும்” என்று கூறினார்.
[2:66] அவர்களுடைய தலைமுறையினருக்கும், அவர் களுக்குப் பின்னர் வந்த தலைமுறையினருக்கும் ஓர் உதாரணமாகவும், நன்னெறியாளர்களுக்கு ஓர் அறிவூட்டலாகவும் அவர்களை நாம் அமைத்தோம்.
[2:68] அவர்கள், “எந்த ஒன்று என எங்களுக்குக் காட்டுமாறு உமது இரட்சகரை பிரார்த்தனை செய்யும்.” என்று கூறினார்கள். “அது அதிகக் கிழடுமல்லாத, இளையதுமல்லாத இரண்டிற்கும் இடைப்பட்ட பசுங்கன்றாகும் என்று அவர் கூறுகின்றார், இப்போது உங்களுக்கிடப்பட்ட கட்டளையைச் செயல்படுத்துங்கள்” என்று அவர் கூறினார்.