Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:69 — பசுங்கன்று

அவர்கள், “அதன் நிறம் என்ன என்பதை எங்களுக்குக் காட்டுமாறு உமது இரட்சகரைப் பிரார்த்தனை செய்யும், என்று கூறினார்கள். அவர், “அது ஒரு மஞ்சள் நிறமுடைய பசுங்கன்றாகும், பிரகாசமான நிறமுடையது, பார்ப்பவரைப் பரவசப்படுத்தும், என்று அவர் கூறுகின்றார்”, என்று கூறினார்.

[2:68] அவர்கள், “எந்த ஒன்று என எங்களுக்குக் காட்டுமாறு உமது இரட்சகரை பிரார்த்தனை செய்யும்.” என்று கூறினார்கள். “அது அதிகக் கிழடுமல்லாத, இளையதுமல்லாத இரண்டிற்கும் இடைப்பட்ட பசுங்கன்றாகும் என்று அவர் கூறுகின்றார், இப்போது உங்களுக்கிடப்பட்ட கட்டளையைச் செயல்படுத்துங்கள்” என்று அவர் கூறினார்.

[2:70] அவர்கள், “எந்த ஒன்று என எங்களுக்குக் காட்டுமாறு உமது இரட்சகரைப் பிரார்த்தனை செய்யும். எங்களுக்கு கன்றுகள் எல்லாம் ஒன்று போலவே தோன்றுகின்றன. மேலும் கடவுள் நாடினால் நாங்கள் வழிகாட்டப்படுவோம்” என்று கூறினார்கள்.