குர்ஆன் 2:72 — பசுங்கன்று
நீங்கள் ஒரு ஆன்மாவைக் கொலை செய்தீர்கள், பின்னர் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் மறைக்க முயற்சி செய்ததைக் கடவுள் வெளிப்படுத்த இருந்தார்.
[2:71] அவர், “நிலத்தை உழுதோ அல்லது பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சியோ இழிவு செய்யப்படாத ஒரு பசுங்கன்று; எந்த ஒரு வடுவுமில்லாதது என்று கூறுகின்றார்” என்று அவர் கூறினார். அவர்கள், “இப்போது நீர் சத்தியத்தைக் கொண்டு வந்தீர்” என்று கூறினார்கள். இந்நீண்ட தயக்கத்திற்குப் பின்னர், இறுதியில் அதனைப் பலியிட்டனர்.
[2:73] நாம், “அதன் (பசுங்கன்றின்) பகுதியைக் கொண்டு (பலியானவரை) அடியுங்கள்” என்று கூறினோம். அப்போது, கடவுள் பலியானவரை உயிர்ப்பித்தார், மேலும் நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு அவரது அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டினார்.