Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:74 — பசுங்கன்று

இதன் பின்னரும், உங்கள் இதயங்கள் கற் பாறைகளைப்போன்று, அல்லது அதைவிடவும், இறுகிவிட்டன. ஏனெனில் ஆறுகள் பொங்கி வழிந்தோடும் கற்பாறைகளும் உண்டு, மற்றவை வெடிப்புற்று மெல்லிய ஓடைகளை வெளிப்படுத்துகின்றன, இன்னும் சிலபாறைகள் கடவுள்-க்காக பயபக்தியினால் அஞ்சி ஒடுங்குகின்றன. கடவுள் நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் ஒரு போதும் அறியாதிருப்பவர் அல்ல.

[2:73] நாம், “அதன் (பசுங்கன்றின்) பகுதியைக் கொண்டு (பலியானவரை) அடியுங்கள்” என்று கூறினோம். அப்போது, கடவுள் பலியானவரை உயிர்ப்பித்தார், மேலும் நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு அவரது அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டினார்.

[2:75] அவர்களில் சிலர் கடவுள்-ன் வார்த்தை கயைக் கேட்டு அவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு, பின்னர் வேண்டுமென்றே அதனைச் சிதைப்பவர்களாக இருக்கும் போது, உங்களைப்போல் அவர்கள் நம்பிக்கை கொள் வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?