Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:75 — பசுங்கன்று

அவர்களில் சிலர் கடவுள்-ன் வார்த்தை கயைக் கேட்டு அவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு, பின்னர் வேண்டுமென்றே அதனைச் சிதைப்பவர்களாக இருக்கும் போது, உங்களைப்போல் அவர்கள் நம்பிக்கை கொள் வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?

[2:74] இதன் பின்னரும், உங்கள் இதயங்கள் கற் பாறைகளைப்போன்று, அல்லது அதைவிடவும், இறுகிவிட்டன. ஏனெனில் ஆறுகள் பொங்கி வழிந்தோடும் கற்பாறைகளும் உண்டு, மற்றவை வெடிப்புற்று மெல்லிய ஓடைகளை வெளிப்படுத்துகின்றன, இன்னும் சிலபாறைகள் கடவுள்-க்காக பயபக்தியினால் அஞ்சி ஒடுங்குகின்றன. கடவுள் நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும் ஒரு போதும் அறியாதிருப்பவர் அல்ல.

[2:76] மேலும் நம்பிக்கையாளர்களை அவர்கள் சந்திக்கும் போது அவர்கள், “நாங்கள் நம்பு கின்றோம்,” என்று கூறுகின்றனர், ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் ஒன்று சேரும் போது, “உங்கள் இரட்சகரைப் பற்றிய அவர்களுடைய வாதங்களுக்கு ஆதாரத்தைக் கொண்டு அவர்களுக்கு நீங்கள் வழங்கி விடாதிருக்கும் பொருட்டு கடவுள்-ஆல் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள செய்தியை (நம்பிக்கையாளர்களுக்கு) தெரிவிக்காதீர்கள். நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?” என்று அவர்கள் கூறுகின்றனர்.