Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:76 — பசுங்கன்று

மேலும் நம்பிக்கையாளர்களை அவர்கள் சந்திக்கும் போது அவர்கள், “நாங்கள் நம்பு கின்றோம்,” என்று கூறுகின்றனர், ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் ஒன்று சேரும் போது, “உங்கள் இரட்சகரைப் பற்றிய அவர்களுடைய வாதங்களுக்கு ஆதாரத்தைக் கொண்டு அவர்களுக்கு நீங்கள் வழங்கி விடாதிருக்கும் பொருட்டு கடவுள்-ஆல் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள செய்தியை (நம்பிக்கையாளர்களுக்கு) தெரிவிக்காதீர்கள். நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?” என்று அவர்கள் கூறுகின்றனர்.

[2:75] அவர்களில் சிலர் கடவுள்-ன் வார்த்தை கயைக் கேட்டு அவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு, பின்னர் வேண்டுமென்றே அதனைச் சிதைப்பவர்களாக இருக்கும் போது, உங்களைப்போல் அவர்கள் நம்பிக்கை கொள் வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்களா?

[2:77] அவர்கள் மறைக்கும் அனைத்தும் மேலும் அவர்கள் அறிவிக்கும் அனைத்தும் கடவுள் -க்குத் தெரியும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?