குர்ஆன் 2:79 — பசுங்கன்று
ஆகையால், அற்பப் பொருளாதார லாபங்களைத் தேடியவர்களாக தங்கள் கரங்களாலேயே வேதத்தைச் சிதைத்து விட்டுப் பின்னர் “ இது தான் கடவுள் வெளிப்படுத்தியது,” என்று கூறுவோருக்குக் கேடுதான். இவ்வாறு சிதைத்ததால் அவர்களுக்குக் கேடுதான், மேலும் சட்ட விரோதமான அவர்களுடைய லாபங்களினாலும் அவர்களுக்கு கேடுதான்.
[2:78] வதந்திகளின் மூலமேயன்றி வேதத்தைப் பற்றி எதுவும் அறியாமல் இருந்து கொண்டு, பின்னர் தாங்கள் அறிந்திருக்கின்றோம் என்று எண்ணிக்கொள்வோரும் வேதம் வழங்கப் படாதவர்களில் உள்ளனர்.
[2:80] குறைவான எண்ணிக்கையிலான நாட்களே தவிர, நரகம் எங்களைத் தீண்டாது என்று சிலர் கூறிஉள்ளனர். “அத்தகையதொரு வாக் குறுதியைக் கடவுள்-இடமிருந்து பெற்றிருக் கின்றீர்களா - கடவுள் ஒருபோதும் தன் வாக்குறுதியை முறிக்கமாட்டார் - அல்லது கடவுள்-ஐ பற்றி நீங்கள் அறியாதவற்றைக் கூறுகின்றீர்களா?” என்று கூறுவீராக.