குர்ஆன் 2:8 — பசுங்கன்று
இன்னும், அவர்கள் நம்பிக்கை கொண்ட வர்களாக இல்லாத அதே சமயம்,“நாங்கள் கடவுள்-ஐயும் மற்றும் இறுதி நாளையும் நம்புகின்றோம்,” என்று கூறுபவர்களும் உள்ளனர்.
[2:7] கடவுள் அவர்களுடைய இதயங்களிலும், அவர்களுடைய செவிப்புலன்களிலும் முத்திரை இடுகின்றார், மேலும் அவர்களுடைய கண்கள் திரையிடப்பட்டுள்ளன. அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[2:9] கடவுள்-ஐயும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுக்கின்ற முயற்சியில், அவர்கள் உணர்ந்து கொள்ளாது தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர்.