குர்ஆன் 2:99 — பசுங்கன்று
இத்தகைய தெளிவான வெளிப்பாடுகளை நாம் உமக்கு இறக்கி இருக்கின்றோம், மேலும் தீயவர்கள்மட்டுமே இவற்றை ஏற்கமறுப்பார்கள்.
[2:98] கடவுள்-ஐயும், அவருடைய வானவர்களையும், மேலும் அவருடைய தூதர்களையும், கப்ரியேலையும், மைக்கேலையும் எதிர்க்கின்ற எவர் ஒருவரும், நம்பமறுப்பவர்களை கடவுள் எதிர்க்கின்றார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
[2:100] ஓர் உடன்படிக்கை செய்து அதனை நிறை வேற்றுவதாக உறுதிமொழி எடுத்துக் கொண் டால், அவர்களில் சிலர் எப்போதும் அதனை அலட்சியம் செய்கின்றார்கள், என்பது உண்மை இல்லையா? உண்மையில் அவர்களில், பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.