குர்ஆன் 20:116 — தா.ஹா.
வானவர்களிடம் நாம், “ஆதாமின் முன் சிரம் பணிந்து விழுங்கள்” என்று கூறியதை நினைவு கூருங்கள். அவர்கள் சிரம் பணிந்து விழுந்தனர், சாத்தானைத் தவிர; அவன் நிராகரித்து விட்டான்.
[20:115] கடந்த காலத்தில் ஆதாமை நாம் சோதித்தோம், ஆனால் அவர் மறந்து விட்டார், மேலும் அவரை நாம் உறுதியற்றவராகக் கண்டோம்.
[20:117] அப்போது நாம் கூறினோம், “ஆதாமே, இவன் உமக்கும், உம் மனைவிக்கும் ஒரு விரோதியாவான். நீர் துயர்மிகுந்தவராக மாறிவிடாதிருக்கும் பொருட்டு, இவன் உங்களைச் சுவனத்திலிருந்து வெளியேற்ற விட்டு விடாதீர்.