குர்ஆன் 21:105 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
சங்கீதத்திலும், அவ்வாறே மற்ற வேதங் களிலும், பூமியானது என்னுடைய நன்னெறியாளர்களான வணக்கசாலிகளால் வாரிசுரிமை கொள்ளப்பட வேண்டும் என நாம் விதித்துள்ளோம்.
[21:104] அந்நாளில், ஒரு புத்தகத்தை மடக்குவதைப் போல், வானத்தை நாம் மடக்கி விடுவோம். முதல் படைப்பை நாம் துவக்கியதுபோல், அதனை நாம் மீண்டும் செய்வோம். இது நமது வாக்குறுதியாகும்; நிச்சயமாக அதனை நாம் நிறைவேற்றுவோம்.
[21:106] வணக்கசாலிகளாக இருக்கின்ற மக்களுக்கு இது ஒரு பிரகடனமாகும்.