குர்ஆன் 21:84 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
நாம் அவருக்கு பதிலளித்து, அவருடைய கஷ்டங்களை நிவர்த்தித்தோம், மேலும் அவருடைய குடும்பத்தை, இன்னும் இருமடங் காக அதிகரித்து அவருக்கு திருப்பித் தந்தோம். அது நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும், மேலும் வழிபடுவோருக் கொரு நினைவூட்டலாகவும் இருந்தது.
[21:83] மேலும் ஜோப் தன் இரட்சகரை: “எனக்குக் கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டன; மேலும், கருணை யுடையவர்கள் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்” என்று இறைஞ்சிப் பிரார்த் தித்தார்.
[21:85] இன்னும் இஸ்மவேல், இத்ரீஸ், ஜல்-கிஃப்ல்; அனைவரும் உறுதியோடு, பொறுமையோடு இருந்தனர்.