குர்ஆன் 21:90 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
நாம்* அவருக்கு பதிலளித்தோம் மேலும் அவருக்கு ஜானை அளித்தோம்; அவருக்காக அவருடைய மனைவியை நாம் சரிப்படுத்தினோம். அது ஏனெனில் அவர்கள் நன்னெறிகளைச் செய்ய விரைபவர்களாகவும், மேலும் இன்பமான சூழ்நிலைகளிலும், அவ்வாறே அச்சத்திலும் நம்மை இறைஞ்சிப் பிரார்த்திப் பவர்களாகவும் இருந்தனர். நம்மிடம், பயபக்தியுடையவர்களாக அவர்கள் இருந்தனர்.
[21:89] மேலும் ஜக்கரியா தன் இரட்சகரை: “என் இரட்சகரே, நீரே சிறந்த வாரிசாக இருக்கும் போதிலும், வாரிசு இல்லாமல் என்னை ஆக்கி விடாதீர்” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.
[21:91] தனது கன்னித்தன்மையைக் காத்துக் கொண்டவரைப் பொறுத்த வரை, நம்முடைய ஆவியிலிருந்து அவருக்குள் நாம் ஊதினோம், மேலும் இவ்விதமாக அவரையும், அவருடைய மகனையும் அகிலம் முழுமைக்கும் ஓர் அறிகுறியாகவும் நாம் ஆக்கினோம்.