குர்ஆன் 21:91 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
தனது கன்னித்தன்மையைக் காத்துக் கொண்டவரைப் பொறுத்த வரை, நம்முடைய ஆவியிலிருந்து அவருக்குள் நாம் ஊதினோம், மேலும் இவ்விதமாக அவரையும், அவருடைய மகனையும் அகிலம் முழுமைக்கும் ஓர் அறிகுறியாகவும் நாம் ஆக்கினோம்.
[21:90] நாம்* அவருக்கு பதிலளித்தோம் மேலும் அவருக்கு ஜானை அளித்தோம்; அவருக்காக அவருடைய மனைவியை நாம் சரிப்படுத்தினோம். அது ஏனெனில் அவர்கள் நன்னெறிகளைச் செய்ய விரைபவர்களாகவும், மேலும் இன்பமான சூழ்நிலைகளிலும், அவ்வாறே அச்சத்திலும் நம்மை இறைஞ்சிப் பிரார்த்திப் பவர்களாகவும் இருந்தனர். நம்மிடம், பயபக்தியுடையவர்களாக அவர்கள் இருந்தனர்.
[21:92] உங்களுடைய கூட்டம் ஒரே கூட்டமே தவிர வேறில்லை, மேலும் நான் மட்டுமே உங்களுடைய இரட்சகர்; நீங்கள் என்னை மட்டுமே வழிபட வேண்டும்.