குர்ஆன் 21:98 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
நீங்களும் கடவுள்-ஐத் தவிர நீங்கள் வழிபடும் இணைத்தெய்வங்களும் நரகத்திற்கு எரிபொருளாவீர்கள்; இதுவே தவிர்த்துவிட முடியாத உங்களுடைய விதியாகும்.
[21:97] அப்போதுதான் தவிர்த்து விட முடியாத அந்த முன்னறிவிப்பு நிகழ்ந்தேறும், மேலும் நம்ப மறுப்பவர்கள் திகிலில் நிலைகுத்தி விடுவார்கள்: “எங்களுக்குக் கேடுதான்; நாங்கள் கவனமற்ற வர்களாகவே இருந்தோம். உண்மையில், நாங்கள் தீயவர்களாகவே இருந்தோம்”.
[21:99] அவைகள் தெய்வங்களாக இருந்திருந்தால், அவை நரகம் சென்று சேர்ந்திருக்காது. அதில் வசிப்பவர்கள் அனைவரும் அங்கே நிரந்தர மாகத் தங்கியிருப்பார்கள்.