குர்ஆன் 22:56 — புனித யாத்திரை
ஆட்சியதிகாரம் அனைத்தும் அந்நாளில் கடவுள்-க்கே உரியதாகும், மேலும் அவர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பார். நம்பிக் கை கொண்டு, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் பேரானந்தமயமான தோட்டங் களுக்குத் தகுதியாகி விட்டார்கள்.
[22:55] நம்ப மறுப்போரைப் பொறுத்தவரை, நேரம் அவர்களிடம் திடீரென வரும் வரை, அல்லது பயங்கரமானதொரு நாளின் தண்டனை அவர் களிடம் வரும்வரை, அவர்கள் தொடர்ந்து தங்கள் இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கிய வண்ணமே இருப்பார்கள்.
[22:57] அதே சமயம் நம்பிக்கை கொள்ள மறுத்து மேலும் நமது வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.