குர்ஆன் 22:59 — புனித யாத்திரை
மிகவும் உறுதியாக, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு நுழைவில் அவர் அவர்களை நுழையச் செய்வார். கடவுள் எல்லாம் அறிந்தவர், இரக்கமிக்கவர்.
[22:58] கடவுள்-ன் நிமித்தம் குடிபெயர்ந்து, பின்னர் கொல்லப்பட்டாலோ, அல்லது இறந்துவிட்டா லோ, அவர்களுக்குக் கடவுள் நிச்சயமாக நல்ல வாழ்வாதாரங்களைப் பொழிவார். வழங்குபவர் களில் நிச்சயமாகக் கடவுள் மிகச் சிறந்தவர்.
[22:60] தன் மீது நேரிட்ட ஓர் அநீதிக்காக, நீதமாகப் பழிதீர்த்த ஒருவர், பின்னர் அதன் காரணமாக அடக்குமுறை செய்யப்படுவாராயின், நிச்சய மாகக் கடவுள் அவருக்கு ஆதரவளிப்பார் என விதிக்கப்பட்டுள்ளது. கடவுள் பிழைபொறுப் பவர், மன்னிப்பவர்.