குர்ஆன் 22:60 — புனித யாத்திரை
தன் மீது நேரிட்ட ஓர் அநீதிக்காக, நீதமாகப் பழிதீர்த்த ஒருவர், பின்னர் அதன் காரணமாக அடக்குமுறை செய்யப்படுவாராயின், நிச்சய மாகக் கடவுள் அவருக்கு ஆதரவளிப்பார் என விதிக்கப்பட்டுள்ளது. கடவுள் பிழைபொறுப் பவர், மன்னிப்பவர்.
[22:59] மிகவும் உறுதியாக, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு நுழைவில் அவர் அவர்களை நுழையச் செய்வார். கடவுள் எல்லாம் அறிந்தவர், இரக்கமிக்கவர்.
[22:61] கடவுள் பகலிற்குள் இரவைச் சேர்க்கின்றார், மேலும் இரவிற்குள் பகலைச் சேர்க்கின்றார் என்பதும், மேலும் கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர், என்பதும் ஓர் உண்மையாகும்.