Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 22:64 — புனித யாத்திரை

வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், அவருக்குரியது. நிச்சயமாக, கடவுள் தான் மிக்க செல்வந்தர், மிக்க புகழுக்குரியவர்.

[22:63] கடவுள் விண்ணிலிருந்து தண்ணீரை கீழே அனுப்புவதையும், அது நிலத்தை பசுமையாக மாற்றுவதையும் நீங்கள் காணவில்லையா? கடவுள் கம்பீரமானவர், நன்கறிந்தவர்.

[22:65] பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் உங்களுக்குப் பணிசெய்வதற்காக, கடவுள் ஆக்கியிருக் கின்றார் என்பதை நீங்கள் காணவில்லையா? அவருடைய கட்டளைப்படி கப்பல்கள் பெருங்கடலில் ஓடுகின்றன. அவருடைய கட்டளைக்கு ஏற்பவே தவிர, விண்ணகப் பொருட்கள் பூமியின் மீது மோதிவிடாதவாறு அவர் தடுத்துக் கொண்டிருக்கின்றார், கடவுள் மனிதர்கள் மீது மிக்க கனிவுடையவராக இருக்கின்றார், மிக்க கருணையாளர்.