குர்ஆன் 22:66 — புனித யாத்திரை
அவர்தான் உங்களுக்கு வாழ்வளித்தவர், பின்னர் அவர் உங்களை மரணத்தில் ஆழ்த்து கின்றார், பின்னர் அவர் மீண்டும் உங்களை வாழ்விற்குக் கொண்டு வருகின்றார். நிச்சய மாக, மனிதன் நன்றியற்றவனாக இருக் கின்றான்.
[22:65] பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் உங்களுக்குப் பணிசெய்வதற்காக, கடவுள் ஆக்கியிருக் கின்றார் என்பதை நீங்கள் காணவில்லையா? அவருடைய கட்டளைப்படி கப்பல்கள் பெருங்கடலில் ஓடுகின்றன. அவருடைய கட்டளைக்கு ஏற்பவே தவிர, விண்ணகப் பொருட்கள் பூமியின் மீது மோதிவிடாதவாறு அவர் தடுத்துக் கொண்டிருக்கின்றார், கடவுள் மனிதர்கள் மீது மிக்க கனிவுடையவராக இருக்கின்றார், மிக்க கருணையாளர்.
[22:67] ஒவ்வொரு சமூகத்திற்கும், அவர்கள் உறுதியாகக் கடைப்பிடித்தாக வேண்டிய சடங்குகளின் ஒரு தொகுப்பை நாம் விதித்துள்ளோம். ஆகையால், அவர்கள் உம்முடன் சச்சரவிட வேண்டாம். ஒவ்வொருவரையும் உம் இரட்சகரின் பால் நீர் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்க வேண்டும். மிகவும் உறுதியாக, நீர் சரியான பாதையிலேயே இருக்கின்றீர்.